Sunday, December 16, 2012

Kadal songs lyrics - கடல் பாடல் வரிகள் -


மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் திரைப்படப்பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோலத்தில் உருவாகி வெளியாகி இருக்கின்றன. ஆஸ்கார் நாயகன், அவர் மீதான ரசிகர்களது எதிர்பார்ப்பை அழகாக பூர்த்திசெய்திருக்கிறார். நீண்ட இடைவெளியின் பின்னர் வெளியாகும் அவரது பாடல்கள் அற்புதமானவை. புதிய பாடகர்களான அபே ஜோத்புர்க்கர, சிட் ஸ்ரீராம், சக்தி ஸ்ரீ கோபாலன், தன்விஷா,ஆர்யன் டினேஷ் கனகரட்ணம் ஆகியோருக்கு வாய்ப்பளித்திருக்கிறார். உனக்கென இருப்பேன் பாடல் மூலம் அனைவரின் இதயத்தையும் கொள்ளை கொண்ட ஹரிச்சரண் ரகுமானின் இசையில் முதன்முறையாக 'அன்பின் வாசலே' என்ற நெஞ்சத்தை நெகிழ வைக்கும் பாடலைப் பாடி உள்ளார்.

பாடல் வரிகளை வைரமுத்து அவர் மகன் மதன் கார்க்கி இருவரும் எழுதியுள்ளார்கள். கவித்துவமான வரிகளில் வைரமுத்துவும் அவரிற்கு இணையாக கார்க்கியும் எங்களைக் கவர்கிறார்கள். கடல் படப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பாடல்களையும் பாடல்வரிகளையும் தந்துதவிய ஆதனிற்கு நன்றிகள்.

சித்திரை நெலா

பாடல்: விஜய் ஜேசுதாஸ்
வரிகள்: வைரமுத்து

சித்திரை நெலா
ஒரே நெலா
பரந்த வானம்
படைச்ச கடவுளு

எல்லாமே ஒத்தையில நிக்குதுடே
நீ கூட ஒத்தையில நிக்கிறடே
எட்டு வை மக்கா
எட்டு வச்சு ஆகாசம்
தொட்டு வை மக்கா
சித்திரை நெலா...

மனிதன் நினைத்தால் வழி பிறக்கும்
மனதிலிருந்தே ஒளி பிறக்கும்
புதைக்கின்ற விதையும்
முயற்சி கொண்டால்தான்
பூமியும்கூட தாழ் திறக்கும்
எட்டு வை மக்கா...

கண்களிலிருந்தே
காட்சிகள் தோன்றும்
களங்களிலிருந்தே
தேசங்கள் தோன்றும்
துயரத்திலிருந்தே
காவியம்
தோல்வியிலிருந்தே
ஞானங்கள் தோன்றும்

சூரியன் மறைந்தால்
விளக்கொன்று சிரிக்கும்
தோணிகள் கவிழ்ந்தால்
கிளை ஒன்று கிடைக்கும்

சித்திரை நெலா...

மரமொன்று விழுந்தால்
மறுபடி தழைக்கும்

மனம் இன்று விழுந்தால்
யார் சொல்லி நடக்கும்
பூமியைத் திறந்தால்
புதையலும் இருக்கும்
பூக்களைத் திறந்தால்
தேன்துளி இருக்கும்

நதிகளைத் திறந்தால்
கழனிகள் செழிக்கும்
நாளையைத் திறந்தால்
நம்பிக்கை சிரிக்கும்
சித்திரை நெலா...

மூங்கில் தோட்டம்
பாடல்: அபே ஜோத்புர்க்கர், ஹரிணி
வரிகள்: வைரமுத்து

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம்

பௌர்ணமி இரவு
பனிவிழும் காடு
ஒத்தையடிப் பாத
உன் கூட பொடி நட

இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே

முங்கில் தோட்டம்...

குளத்தாங் கரையில்
குளிக்கும் பறவைக
சிறகு உலத்துமே
துளிக கோபம் விடுத்து
முந்தான எடுத்து
நீ மெல்ல துடைக்க

நான் ஒன்ன அணைக்க
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே

மூங்கில் தோட்டம்...

மரங்கள் நடுங்கும்
மார்கழி இருக்க
ரத்தம் உறையும்
குளிரும் இருக்க

உஷ்ணம் யாசிக்கும்
உடலும் இருக்க
ஒத்தப் போர்வையில
இருவரும் இருக்க
இது போதும் எனக்கு
இது போதுமே
வேறென்ன வேணும்
நீ போதுமே

மூங்கில் தோட்டம்...

அடியே
பாடல்: சிட் ஸ்ரீராம்
வரிகள்: கார்க்கி

மனச தொறந்தாயே நீ
எங்கிருந்து வந்தாயோ நீ

அடியே அடியே
எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற

அடியே அடியே
எங்க நீ கூட்டிப் போற?
என்ன எங்க நீ கூட்டிப் போற

பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேன்
இந்தக் காட்டுப்பய
ஒரு ஆட்டுக்குட்டி போல

உன் பின்ன சுத்துறனே
அடியே அடியே...

மீனத் தூக்கி ரெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ?
அடியே அடியே...
கண்ணாலக் கண்ணாடி செஞ்சு
என் அச்சத்தக் காட்டுறியே
என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளையடிக்குறியே

அடியே அடியே...

பூமிவிட்டு சொர்க்கத்துக்கு
வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி
இழுத்துப் போறாயே நீ
சொர்க்கம்வி;ட்டு பூமி வந்தா
நான் விழிச்சுப் பாக்கையில
கலஞ்சு போவாயோ நீ?

அடியே அடியே...

ஏலே கீச்சான்...
ஏ.ஆர்.ரஹ்மான்
வரிகள்: மதன் கார்க்கி

ஏமா சீலா – நம்ம
கடலம்மா அள்ளித்தாரா
ஆமா சீலா – அவ
அலை வீசிச் சிரிக்குறா
ஏலே கீச்சான் வெந்தாச்சு – நம்ம
சூச பொண்ணும் வந்தாச்சு
ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு

ஓ ஓ ஓ ஓ வாலே கொண்டாலே
கட்டுமரம் கொண்டாலே
குண்டு மீன அள்ளி வரக் கொண்டாலே
ஏளா பாய் விரிச்சா
அய்யோ
வாவல் வாசந் தேடி தேடி
வாரான் கீச்சான்
ஓங் கீச்சான்
ராவோட கூவகிட்ட கண்ணக் கேப்பான்
றாலோட றாலோட மீச ஒண்ணக்
கேப்பான் கீச்சான் (ஆலேலோ)
புலிவேசம் போட்டு (ஏலேலோ) வருவான்
கீச்சான்...வருவான்...

ஏலே கீச்சான்..

ஹே
சட சட சடவென காத்துல ஆடும்
என் சாரம் ஏளா ஓம் பேர பாடாதா?
ஒரு ஒரு ஒரு ஒரு ஒ...
ஒருதரம் ஒருதரம் ஒரச
பொசுக்குன்னு உசுப்புற உசுர

ஓனக்காக வலையொண்ணு வலையொண்ணு
விரிச்சிருக்கேன் நான் தவமிருக்கேன் - நீ
விழுவேன்னு விளக்கெண்ண ஊத்திக்கிட்டு
முழிச்சிருக்கேன் நான் அரக்கிறுக்னே;

நீ வேணா சொன்னா
எங்க எங்க போவானோ தோமா?
ஒத்த அலையில மெதக்குற
ஒடம்போல் உன் நெனப்புல
நான் மெதந்து கெடக்குறேன்
ஓரப் பார்வையால சிரிச்சா என்ன?

ஏலே கீச்சான்...

நீ திடுதிடுக்க – என்ன
சுத்தி வளைக்க – நான்
வெலவெலக்க – தல
கிறுகிறுக்க

நீ பாத்த நொடியே – ஹே
பித்து பிடிக்க – என்
தூத்துக்குடியே ஒன்ன
தூக்கி இழுக்க
தூக்கி இழுக்க

இத்தன மச்சம் - ஹே
எத்தன லட்சம் - அத
எண்ணி முடிச்சே – நம்ம
தூக்கம் தொலைச்சோம்

ஏ ஒத்த பிடியா – நீ
மொத்தம் கொடுத்த – என்
அன்ன மடியா – என்ன
வாரி எடுத்த
வாரி எடுத்த

ஏமா சீலா – நம்ம
கடலம்மா அள்ளித்தாரா
ஆமா சீலா – அவ
அலை வீசிச் சிரிக்குறா

ஏலே கீச்சான் வெந்தாச்சு – நம்ம
சூச பொண்ணும் வந்தாச்சு

ஹே ஈசா வரம் பொழிஞ்சாச்சு
ஓ ஓ ஓ ஓ வாலே கொண்டாலே
ஏலம் போடக் கொண்டாலே
போகும் மேகம் மீனத்தூவும் கொண்டாலே

நெஞ்சுக்குள்ள

பாடல்: சக்தி ஸ்ரீ கோபாலன்
வரிகள் : வைரமுத்து 

நெஞ்சுக்கள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்
எங்கே எத்திசையில்;
எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ

வெல்லப் பார்வ வீசிவிட்டீர் முன்னாடி
இந்தத் தாங்காத மனசு
தண்ணிபட்ட கண்ணாடி
வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆனை புலியெல்லாம்
அடக்கும் அதிகாரம்

நீர் போனபின்னும்
நெழல்மட்டும் போகலையே போகலையே
நெஞ்சுக்குழியில்
நெழல்வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிந்தவதான்
அப்புறமா குனியலையே குனியலையே
கொடக்கம்பி போலமனம்
குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ளே...

பச்சி ஒறங்கிருச்சு
பால் தயிராதி; தூங்கிருச்சு
இச்சி மரத்து மேல
எலகூடத் தூங்கிருச்சு

காசநோய்க்காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில்
அசநோய் வந்தமக
அரநிமிசம் தூங்கலையே
நெஞ்சுக்குள்ள...

ஒருவாய் எறங்கலையே
உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா
எச்சில் முழுங்கலையே

ஏழை இளஞ்சிறுக்கி
ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவில்லையே
சத்தமிட வாயில்லையே

நெஞ்சுக்கள்ள...

அன்பின் வாசலே...
பாடல்: ஹரிச்சரண்
வரிகள்: மதன் கார்க்கி

நீ இல்லையேல்
நான் என் செய்Nவுன்?
நீ இல்லையேல்
நான் என் செய்வேன்?

அன்பின் வாசலே

எமை நாளும் ஆளும் உருவை
மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும்
உனதே என்போம்

நாளங்கள் ஊடே உனதன்பின் பெருவெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதன்னமாக
நீயே எமதெண்ணமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீ நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மைக் கரைக்கிறோம்

வான் மண் நீர் தீ... எல்லாம் நீ தானே
சீற்றம் ஆற்றும் காற்றும் நீ தானே

நீயே எமதன்னமாக...

கண்ணீரைத் தேக்கும் என் உள்ளத்தாக்கில்
உன் பேரைச் சொன்னால் பூப்பூத்திடாதோ?

எமை நாளும் ஆளும் உருவை...

பூவின் மேலே வண்ணம் நீ தானே
வேரின் கீழே ஜீவன் நீதானே

நீயே எமதன்னமாக...

அன்பின் வாசலே

மகுடி... மகுடி...
பாடல்: ஆர்யன் டினேஷ் கனகரட்ணம், சின்மயி, தன்விஷா
வரிகள்: ஆர்யன் டினேஷ் கனகரட்ணம்
விடைகொடுத்திட
வழிகளை அமைப்பவன்
விதிகளை மாற்றிட
வரங்களை படைத்திட வா...
கனவில்லை இது நிஜமென்று
ஒருமுறை கண்களைப்
பார்த்துதான் சொல்லிட வா வா
திராவிட பூமியில் ஆளத்தான்
பிறந்தவன் கொடியைத்தான்
நாற்றிடப் பிறந்தவன் நான்டா
நவீன உலகை அழிக்க
நினைக்கும் கலியுக சகுனி
போதும் நீ ஊதும் மகுடி

மகுடி... மகுடி... மகுடி...

உனக்கு தெரியுமா?
நான் உன்ன நினைப்பேன்
நீ என்ன மறப்ப...!

நான் அடிப்பேன் நீ சிரிப்ப...!

நீ ஊர் சுத்தி நான் உன்ன சுத்தி...!

நான் எதிர் நீ புதிர்...!

நான் மகுடிடா நீ பாம்பு

எங்கடா இருக்க? சீக்கிரம் வா...!
ரௌடி நீ ராக்கம்மா...யே
ராங்கி நீ பக்கம் வா
வாயாடிச் சத்தமா வா வா
ச ச ச ம ம ம நி நி நி
வா வா வாPost a Comment

Popular Posts