படித்ததில் பிடித்தவைகள்


அந்தக் காவல் நிலையம் இரவில் மெனமாக இருந்தது.லாக்-அப்பில் அதிகம் கைதிகள் இல்லை.குடித்த கேஸ்கள் எல்லாம் பெஞ்சில் படுத்துவிட்டார்கள்.ரைட்டர் மாதவனால் துhங்க முடியவில்லை.

கொசுவர்த்தி சுருள் காலடியிலும் மேஜை மேலும் கொளுத்தி வைத்துஇகூடக் கொஞ்சம் வேப்பிலையை எரித்து ,ஃபேனை முழு ஓட்டத்தில் செலுத்திவிட்டு,கொசுவை லபக் லபக்கென்று விளம்பரங்களில் சாப்பிடும் அந்த பிளாஸ்டிக் சமாச்சாரம் வைத்தும்…மயிலாப்பூர் கொசுக்கள்,’இதெல்லாம் எந்த மூலைக்கு… வேலைக்கு உதவாது’ என்று இஷ்டப்பட்ட இடத்தில் காக்கி உடை மேல் உட்கார்ந்து கால்களைத் தேய்த்துக்கொண்டு நோவாகாக இன்ஜெக்ஷன் குத்தி இரத்தம் உறிஞ்சி,மூணு நாளைக்கு ரொப்பிக்கொண்டு ‘நன்றி’ என்று சொல்லிப் பறந்து சென்றனர்.

மாதவன்,போலீஸ் வேலையை விட்டுவிடுவதாக மறுபடி தீர்மானித்தார்.
மேலும் படிக்கPost a Comment

Popular Posts