Tuesday, June 29, 2010

18 வயசுல
நம் ஒவ்வொருவரது வாழ்க்கையின் ஞாபகப் பதிவுகளில் இன்னும் பசுமையாக இருக்கின்றது "18 வயது’… பருவத்தின் விளிம்பில் மன அலைகள் கட்டுக்கடங்காமல் கரைபுரண்டோடும்… காதல் துளிர்விடும் நட்பு பலம்பெறும் எதுவும் அழகாய்த் தெரியும்… பார்க்கும் யாவும் கவிதையாகும்,உதடுகளில் உதிர்ந்து விழும் பாடல் வரிகள்… பூக்கள்,நிலவு,காற்று கடற்கரை இவைகளைப் பொறுமையாய் ரசிக்கும் மனம்… பா.விஜயின் ‘18 வயது’ நமது ஞாபங்களையும் மீட்டிப்போகிறது இங்கே….

18 வயசுல

கொலுசு உன் கால்களோடு
போய்விட்டது
சத்தம் மட்டும் என் காதுகளோடே
வருகிறது

எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கி
வழுக்குது
மல்லிகைப் பூவும் என் மனசும்…

பெரிய தலைகாணிக்கு போட்ட
சின்ன தலைகாணி
உறை போல்உன் உடை

பாஸாக வேண்டும் என்று
கோயில் சுவற்றில்
இருவருமே பேர் எழுதினோம்.
நீ மட்டும் பாஸானாய்
சாமி கூட உன்னை மட்டும்தான் பார்க்கிறது

கம்பெனி சைக்கிளில் போகும் உனை
வாடகை சைக்கிளில் தொடர்வேன்
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்செயினும் என் தைரியமும்

பேச முடிவதேகொஞ்ச நேரம்தான்
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு வரக்கூடாதா?

குனிந்தபடி கிணற்றில் நீ
தண்ணீர் மொண்டு போய்விடுவாய்
வாளியில் தொங்கிக் கொண்டிருக்கும்
திருட்டுத்தனமாய் சிந்திய புன்னகை

ரோஸ் ஐஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்
நிறமாற்ற விதி என்பது
இயற்பியல் அல்லஇதழியல்
சின்ன வயசில்
நிறையசிலேட்டு குச்சிகளை முழுங்குவேனாம்
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம் உன்னைப்பற்றி எழுதத்தானோ?

உன் தலையில்
ஊர்ந்துஉன்னைக் கடிப்பது
பேன்களாக இருக்காது
வண்டுகளாகத்தான் இருக்கும்

கோடை விடுமுறைக்கு நீ
ஊருக்குப் போகையில்
நான் பள்ளிக்கூடம் போவேன்
உன்னைப் பற்றி படிக்க

மளிகைக் கடையில்
அரைக்கிலோ சிரித்தபடி
கால்கிலோ சக்கரை வாங்குவாய்
கடைக்காரனோ ஒருகிலோ உருகுவான்

உன் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு
நடைவண்டியில்
நடக்கக் கற்றுக் கொடுத்தாய்
நடந்து கொண்டிருந்த என்னை
தத்தித் தவழ செய்துவிட்டாய்

கோலம் போடும் முன்
வாசலில் தண்ணீர் தெளிக்கிறாயே
உன் அடர்த்தியான அருகாமையில்
பூமி தீப்பற்றக் கொள்ளக்கூடாதென்றா?

விலை மதிக்க முடியாத
உன் உதட்டின் உஷ்ணத்தை
ஐம்பது பைசா பலூனுக்குள்
ஊதி வைக்கிறாயே

அக்கா சேலையைக் கட்டிக்கொண்டு
அண்ணன்காரனுடன் நீ
கோயிலுக்குப் போகையில்
மாமனாகிறது மனசு

கருப்பு மணிகோர்த்துப்
போட்டுக் கொண்டிருக்கும்
வெள்ளரிக் கனி நீ

உடைத்துத் தேங்காயைப்
பற்களில் கடித்து
நீ செய்த பல்வெட்டுக்கள்
தேங்காய்க்குத் தந்த கல்வெட்டுக்கள்

காதைப் பிடித்து
திருகுவது நீ என்பதால்
வானொலி கூட ஆனந்தமாய்
வாய்ப்பாட்டே பாடுகிறது

பாண்டி ஆட்டத்தில்
வானத்தைப் பார்த்துக்கொண்டே
கோடு தாண்டுவாய்
உன்னைப் பார்த்துக் கொண்டே நான்
ரோடு தாண்டுவேன்

தூக்கணாங் குருவிக் கூட்டை
ஆச்சர்யமாய் பார்த்தாய்
உள்ளிருந்த குருவிகள்
உன்னை ஆச்சர்யமாய் பார்த்தன…
அதிசயங்கள் ஒன்றையொன்று பார்த்து
அதிசயித்துக் கொள்வது
அதிசயமில்லை தானே!

துணி துவைக்கும் போது
சோப்பு நுரையைக்
கையில் அள்ளி ஊதி விடுவாய்
நாலாபுறமும் நுரை தெறிக்கும்
காற்றுக்கும் எனக்கும் உடல் சிலிர்க்கும்

நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா?

கொல்லைப் புறத்தில் மண்சுவர் கட்ட
உன்னை மண்குழைத்து மிதிக்க விட்டிருந்தார்கள்
நீ மிதித்த மண்ணில்
கட்டப்படும் சுவர்
மண்சுவர் அல்ல
பொன்சுவர்

ஆற்றுத் தண்ணீரில் நீ
வெள்ளை வெளேர் கால்களை வைத்ததுமே
ஆம்பிளை மீன்கள் எல்லாம்
ஆளாகிவிட்டன

வெள்ளிக் கிழமையானால்
அரசமரத்து விநாயகருக்கு
அகல்விளக்கு போடுவாய்
விநாயகருக்கும் எனக்கும்
வெள்ளிக்கிழமை வெளிச்ச நாள்

வடகம் காயப்போட்டு விட்டு
காக்கா ஒட்டிக்கொண்டிருந்தாய்
நீ ஓட்டும் அழகைக் காணவே
காகங்கள் வந்து குவிந்தன

முற்றத்திலிருந்த துளசி மாடத்தை
நீ சுற்றிவரும் போது
மாடத்துக்கடியில் அதன் வேர்கள்
மத்தளம் கொட்டிக்கொண்டது

முள்குத்திய இடத்தில்
கள்ளிப் பால் வைத்தாய்
உன் கண் குத்தியதற்காய்
நான்கள்ளிப்பால் வைக்க ஆரம்பித்தால்
அதில் குளித்தால் தான் ஆறும்

ஓவியப் போட்டியில்
பாரதியார் படம் நீ வரைந்திருப்பாய்
பாரதியார் அதைப் பார்த்திருந்தால்
தன் முண்டாசைக் கழற்றி
உன் தலைக்குக் கட்டிவிட்டிருப்பார்.

தினசரி உன் வீட்டு வாசலில்
கோலங்கள் தான் போடுகிறாயா?
இல்லை
பாத ஸ்பரிசங்களை சேமித்த நிலம்
ஒவ்வொரு காலையிலும்
அதைவெளிப்படுத்துகிறதா?

கொஞ்சம் உப்புக்கரிக்கிறதுஎன்பதால்
மதியம் நீ சாப்பிடவில்லையாம்
உப்பு சத்தியாக்கிரகம் என்பதுஇதுதானோ!

கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ கால்களில் அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம்

நீண்ட நேரம் நின்று
கண்ணாடியில் முகம் பார்க்காதே
கண்ணாடியின் உள்நாடிஆடிவிடப் போகிறது

குட்டி ஆட்டைப் பார்த்தால்
ஹை என்பாய்
உன்னைப் பார்த்தால்
குட்டி ஆடு மே என்னும்
மே என்பது ஆட்டு மொழியில்
ஹை தானே

பழைய பேப்பர் பையனுக்கும்
ஏன் புதிய புன்னகை போடுகிறாய்
அரிசி புடைக்கும்
உன் அம்மாவுக்குத்தெரியுமா?
மகள்புருவ அசைவிலேயே
இதயத்தைபுடைத்து எடுப்பாள் என்று

புறாக்காலில் கடிதம் கட்டிவிடும்
சங்ககால ஆசை சிறகடிக்கிறது
கண்ணில்ஆனால்
சூப்பாகி விடுவோமா
புறாவும் நானும்?

பறவைகளின் மொழி கூடபுரிந்து விடும்-
ஆனால் உன்பார்வைகளின்
மொழிபுரிவது கடினம்
ஐந்து மணி அடித்ததும்
கண்களை விழிக்கிறாயா?
அல்லது நீ கண்களை விழித்ததும்தான்
ஐந்து மணி அடிக்கிறதா

நீ காது குடைவதற்காகத்தானே
இறகு வளர்க்கின்றன
இள மைனாக்கள்

டீக்கடையில் - உன்
பத்தாங்கிளாஸ் நோட்டுப்புத்தகம்
பஜ்ஜி மடிக்க வந்திருந்தது
அதைப் படிப்பதற்காகவே
நோட்டுப் புத்தகம் தீரும்வரை
பஜ்ஜிகள் வாங்கக் கொண்டிருந்தேன்

தீக்குச்சியை கொளுத்தி விட்டு
தீப்பெட்டி சும்மாயிருப்பது மாதிரித்தான்
என்னைப் படுத்திவிட்டு
இளிக்கிறாய் நீ

உன் கூந்தல் சிலுவையில்
அறையப்படும்மல்லிகைப் பூக்கள்
மறுநாள் மரிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன

புதுசாய் ஓவியம் வரைபவன்
மாதிரியேபுதுசாய் காதலிப்பவனும்
எங்கே ஆரம்பிப்பது என்பதுதெரிவதில்லை

சும்மா இருக்கும் நேரத்தில்
வயர் கூடை பின்னுகிறாய்
உன்னைப் பற்றி யோசிப்பதால்
நான் சும்மாவே இருப்பதில்லை

சிலந்தி நூலை விட மெல்லிய
உன் கேசத்திற்குள் புகும்
சாம்பிராணி புகையை
சுவாசிக்கவாவது
உன் கணவனாக வேண்டும்

ஆட்டுக்கு முள் குத்தினால்
அச்சச்சோ என்கிறாய்
என் ஹாட்டுக்குள் முள் குத்துதே
ஏன் அமைதியாய் செல்கிறாய்?

வாழைமரத் தண்டைப் பார்த்துவிட்டு
வளவளப்பாய் இருக்கிறது என்றாய்
உன் முதுகைப் பார்க்க
பாவம் முடியாதே உன்னால்

தினம் ஒரு முறையாவது
துணிகாயப்போட
மொட்டை மாடிக்கு வந்து
காய்ந்து நிற்கும் என் மனசை
நனைக்கக் கூடாதா?

உலகத்தில்
கவிஞர்களும் பைத்தியங்களும்
உருவாக்கப்படுகிறார்கள் போல
உன்னைப் பார்த்து இரண்டுமாய் நான்

பூஜை நேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது


மிகுதி அடுத்த பதிவில்….

Thursday, June 24, 2010

ஒரு தமாஷான பேய்க்கதை


எழுத்தாளர் சுஜாதாவின்,நாவல்கள்,சிறுகதைகள்,கட்டுரைகள்,கேள்வி பதில்கள் வரிசையில் அவரின் சிறுசிறு கதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.இவ் வகைக் கதைகள் சுஜாதாவின் கதை சொல்லும் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியதோடு மட்டுமின்றி ஏராளமான எழுத்தாள்ர்கள் உருவாவதற்கும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது என்று கூறின் அது மிகையாகாது.

ஆங்கிலத்தில் வெளிவந்த Sudden Fiction ,Short Science Fiction ,ஹைபுன்,ஹைகா என பல்வேறுபட்ட வடிவங்களை தமிழில் அறிமுகப்படுத்தி பின்னா; அவைகளை போன்று தமிழிலும் முயன்றிருக்கின்றார் சுஜாதா.இவை குமுதம் இதழில் முன்னா; வெளிவந்திருந்தது வாசகர்கள் அறிந்ததே.இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் வாசகர்களையூம் இவ்வகைக் கதைகளை எழுதத்துhண்டி அவற்றில் சிறப்பானவற்றை வெளியிட்டமையாகும்.என்போன்ற எத்தனையோ வாசகர்கள் இதில் பங்குகொள்ளமுடியாமல் முடியாமற் போய்விட்டது.எனினும் எமது சுஜாதா மறைந்தாலும் அவாpன் முயற்சியைத் தொடருரலாம் என நினைக்கின்றேன்.கீழே அவை தொடர்பான சுஜாதாவின் விளக்கக் குறிப்புகளையூம் அதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட கதைகளையூம் தருகின்றேன்.


சிறு சிறுகதைகள்....

---------------------------
சி.சி.கதை என்பது நீதிக்கதை அல்ல.உபதேசக் கதையூம் அல்ல.மிக கவனமாக கட்டமைக்கப்பட்ட கதை அது.அது சட்டென்று ஏற்படுத்தும் விளைவூம்,அதன் காலப்பிரமாணமும் சிலசமயம் ஒரு முழு நாவலை உள்ளடக்கியிருக்கும்.

ஒரு உதாரணம்:

ஒரு தமாஷான பேய்க்கதை

அந்தக் காவல் நிலையம் இரவில் மெனமாக இருந்தது.லாக்-அப்பில் அதிகம் கைதிகள் இல்லை.குடித்த கேஸ்கள் எல்லாம் பெஞ்சில் படுத்துவிட்டார்கள்.ரைட்டர் மாதவனால் துhங்க முடியவில்லை.


கொசுவர்த்தி சுருள் காலடியிலும் மேஜை மேலும் கொளுத்தி வைத்துஇகூடக் கொஞ்சம் வேப்பிலையை எரித்து ,ஃபேனை முழு ஓட்டத்தில் செலுத்திவிட்டு,கொசுவை லபக் லபக்கென்று விளம்பரங்களில் சாப்பிடும் அந்த பிளாஸ்டிக் சமாச்சாரம் வைத்தும்…மயிலாப்பூர் கொசுக்கள்,’இதெல்லாம் எந்த மூலைக்கு… வேலைக்கு உதவாது’ என்று இஷ்டப்பட்ட இடத்தில் காக்கி உடை மேல் உட்கார்ந்து கால்களைத் தேய்த்துக்கொண்டு நோவாகாக இன்ஜெக்ஷன் குத்தி இரத்தம் உறிஞ்சி,மூணு நாளைக்கு ரொப்பிக்கொண்டு ‘நன்றி’ என்று சொல்லிப் பறந்து சென்றனர்.


மாதவன்,போலீஸ் வேலையை விட்டுவிடுவதாக மறுபடி தீர்மானித்தார்.கன்னத்தில் கடித்த கொசுவை விரட்டும் பரபரப்பில்,உள்ளே வந்தவனை கவனிக்கத் தவறிவிட்டார்.அவன் நேராக வந்து எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான்.கொஞ்சம் களைத்திருந்தான்.ஏதோ அடிபட்டவன் போலத் தோன்றினான்.காதருகே ரத்தக்கோடு தெரிந்தது.


“யாருப்பா?”

“ஐயா,நான் ஒரு எஃப்.ஐ.ஆர்.பதிவூசெய்ய வந்திருக்கேங்க.”

“என்ன விஷயம்?”

“ஒரு கொலை நடந்துபோச்சு.அதை பதிவூ செய்ய வந்திருக்கேங்க”

“எங்க நடந்துச்சு?”

“இங்கிருந்து நுhறடி தள்ளி இதே ரோடுல”

“செத்தது யாரு?”

“நடராசுங்க”

“உங்க பேரு?”

“நடராசுங்க”


மாதவன் சிரித்தார்.”செத்தது நடராசு… hpப்போர்ட் செய்யறதும் நடராசு … வினோதமாத்தான் இருக்குது.இம்மாதிரி கேஸ் இரண்டு முறை ஆயிருக்கு.”

“இறந்ததும் நாந்தாங்க.”

“புரியலை.இறந்துபோனது நீதான்னா… எப்படிய்யா எஃப்.ஐ.ஆர்.எழுத வந்திருக்கே?”

“ஏங்க வரக்கூடாதா..? என் சாவை நானே பதியக்கூடாதா?”

“ஒண்ணுமில்லையே… சொல்லு,ஏதாவது லேகியம் அடக்கிட்டிருக்கியா… சமுதாயத்தின் மேல கோவமா எழுதற ஆளா?”

“இல்லைங்க,நான் எறந்துட்டேங்க.அதை எஃப.ஐ.ஆர் பதிய வந்தேங்க.”

மாதவன் கோபத்துடன், “யோவ் உயிரோட இருக்கற ஆளுதான் நாற்காலில உக்கார முடியூம்-பேசும்-புகாம் கொடுக்க முடியூம்.”

“என்னால முடியூதுங்களே…”

“அப்ப,நீ உயிரோடதான் இருக்கேன்னு அர்த்தம்.நோ க்ரைம்.”“அப்ப நான் சாவலையா?”

“பாரு,நீ சாவலை.வேற யாரோ செத்ததைப் பாத்ததை நீ செத்ததா நினைச்சிட்டிருக்கே.ஒரு கிளாஸ் தண்ணி குடி.எல்லாம் சரியாயிடும்.”

“இல்லைங்க,நாந்தாங்க… இப்பத்தாங்க செத்தேன்” என்றான் அழாக்குறையாக.

“சரியாப்போச்சு” என்று அலுத்துக்கொண்டார் மாதவன்.ஆனால் அவன் முறையீட்டில் ஓர் உண்மைத்தனம் இருந்தது.குறும்போ,விளையாட்டோஇகேலியோ ஏதும் இல்லை.மாதவனை அது சங்கடப்படுத்தியது.?”


“ஒரு விபத்தில் செத்தங்க.சைக்கிள் ஓட்டிக்கிட்டு வந்தப்ப,எதிர்ல ஒரு ஆளு கண்மூடித்தனமா கார்ல வந்து மோதிட்டாங்க.கார் நம்பர் எல்லாம் நோட் பண்ணி ரிப்போர்ட் கொடுத்திட்டுப் போவலாம்னு வந்தேங்க.அப்புறம் எனக்கு ஞாபகம் தப்பிடும் பாருங்க!”

“யோவ்! வேளையாடறியா?”

“இல்லைங்க,மெய்யாலுமே செத்துட்டங்க.”

மாதவன் சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

பெஞ்சில் படுத்திருந்த போதை நீங்கிய குடிகாரன்,”ரைட்டர் ஐயாதான் சொல்றாரில்லை.போவியா…” என்று அதட்டினான்.

“பாருஇ நீ செய்யறதெல்லாம் உயிருள்ளவங்க செய்யற வேலைய்யா… நீ சாவலை,சாவலை.”

“நான் செத்தாச்சுங்களே!”

மாதவன் மதனகோபாலுக்கு போன் செய்தார்.“சார்! ராத்திரி வேளையில தொந்தரவூ கொடுக்கறதுக்கு மன்னிச்சுக்குங்க…”

“தொந்தரவூ கொடுத்தாச்சுஇஎன்ன சொல்லுங்க?”

“ஒரு ஆளு டெத் ஒண்ணை ரிப்போர்ட் பண்ணணும்ங்கறான்இசெத்தது யாருன்னா நான்தாங்கறான்.”

“குடியா?”

“தெரியலை.ட்ரக் ஏதும் எடுத்தாப்பலயூம் தெரியலை.சாதுவாத்தான் இருக்கான்.”

“ஒண்ணு செய்யி.. அவனை காலைல வரச்சொல்லுஇஇன்ஸ்பெக்டர் வந்ததும் பதிஞ்சுக்கலாம்னு சொல்லி அனுப்பிரு.”

“கேக்கமாட்டேங்கறான் சார்.திருப்பித் திருப்பி ‘நான் செத்தாச்சு செத்தாச்சுங்கறான்.”“போனை அவன்கிட்ட கொடு.நான் பேசறேன்.”

“இந்தாய்யாஇஎங்க எஸ்.பி.கிட்ட பேசு” என்று போனை அவனிடம் கொடுத்தார் மாதவன்.

அடுத்தகணம் மயக்கம் போட்டு தொபுக்கென்று விழுந்தார்.

“அய்யா வணக்கங்க! எம்பேரு நடராசுங்க” என்றது அந்தரத்தில் தொங்கிய போன்.

Tuesday, June 15, 2010

அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்


‘அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்’ என்ன ஒரு அழகிய தலைப்பு…! இந்த நாவலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கின்றது.அலெக்ஸான்டரின் சரித்திர கதையும் தற்கால சமூகக் கதையும் இரு சமாந்தரப் பாதைகளாக நீண்டு செல்லும் நாவலில் ஒரு சமயம் அவைகளை சந்திக்கவும் வைக்கிறார் எழுத்தாளர்.Autofiction என்கின்ற தன்பெருக்கி முறையை இந்நாவலில் சுரேஷ் கையாண்டிருக்கிறார்.


போர் எந்தக்காலத்திலும் தீராத வேதனைகளையே பரிசாகத் தந்திருக்கிறது.யுத்த வடுக்கள் காலத்திற்கும் மறைவதில்லை.இடப்பெயர்வும் புலம்பெயர்வும் மானுடத்தை அலைக்கழிக்கின்றது.அலெக்ஸான்டர் தன் வாழ்வின் இறுதித் தருணங்களில் தன் தவறுகளை உணர்ந்துகொள்கின்றான்.ஞானி டயோஜினஸ் அவனது அகந்தையை நோக்கி வீசிய கேள்விகளை காலம் கடந்து புரிந்துகொண்டபோதும் ஒரு பயனும் ஏற்பட்டிருக்கவில்லை.டயோஜினஸ் அலெக்ஸான்டரைப் பார்த்துக் கேட்கின்றார்…. ‘நான் சுதந்திரமாக இருக்கிறேன்.நீயோ அடிமையாக இருக்கிறாய்.உனது அகந்தைக்கு; உன் அதிகாரத்துக்கு; உன் புகழ் போதைக்கு நீ அடிமையல்லவா, உண்மையில் ஜெயித்துக் கொண்டிருப்பது நீயல்ல.உன்னை உன் அகந்தைதான் ஜெயித்துக்கொண்டிருக்கிறது.தன்னை சர்வ வல்லமையுள்ளவனாக நினைத்துக் கொண்டு,அகந்தையுடன் திரியும் ஒரு மனிதனை ஒரு சாதாரண காய்ச்சலால் வீழ்த்திக் காட்டிவிட முடியும் என்பதை மறந்துவிடாதே…


உலகை வெல்லப் புறப்பட்டிருக்கிறேன் என்கிறாய்.ஒருவேளை, வழியில் ஜூரம் வந்து சாக நேர்ந்தால் என்ன செய்வாய்? நிறைவேறாத ஆசைகளுடன் அணு அணுவாக உயிரை விட்டுக்கொண்டிருப்பாயே… அது மிகப்பெரிய ஒரு சோகம்.ஒரு கொடிய தண்டனை அல்லவா?


இவை இக்காலத்திற்கும் மிகச் சரியாக பொருந்துகின்றது அல்லவா? இன்றும் எத்தனை டயோஜினஸ் வந்தாலும் நிகழ்கால யுத்த வெறியை மாற்ற முடியாது என்பதே உண்மை.


இந்த நாவலில் ஒரு பகுதியான சரித்திரக் கதையுடன் சமாந்தரமாகப் பயணிக்கும் சமூகக் கதையின் ஒரு சாத்தியப்பாட்டில் அதில் வரும் அலெக்ஸ், ருக்ஸானா ஆகியோர் இறந்த காலமான அலெக்ஸான்டரின் காலத்திற்குள் நுழைகின்றனர்.அதே சமயத்தில் வேறான எதிர்காலங்களுக்குள்ளும் நுழைந்து வெளியேறுகின்றனர்.எகிப்திய பிரமிட்டிற்குள் இருக்கும் ராஜாவின் அறைக்குள் கண்மூடிய கணப்பொழுதுக்குள் காலங்களைக் கடந்து இவர்களால் செல்ல முடிகின்றது.


அலெக்ஸ் நுழையும் காலத்தின் ஒரு சாத்தியப்பாட்டில், அங்கு எமது பூமியின் எதிர்காலம் அதிர்ச்சியூட்டுகின்றது.இன்னொன்றில் நுழையும் ருக்ஸானாவின் அனுபவம் எமது கனவுலகம் போன்று வியப்பூட்டுகின்றது.இறுதியில் இவர்கள் சந்தித்த எதிர்காலம் அவர்களை அதிரடித்ததைப் போன்று எம்மையெல்லாம் கலங்கடிக்கும்.வாசித்து முடித்தவுடன், நாவலின் இறுதியில் கதாபாத்திரங்கள்; உறைந்து போவதைப் போன்று நாமும் உறைந்து போய்விடுகின்றோம்;…..இந்நாவல் பற்றி சுரேஷ் சொல்வது….
‘ நவீன மனிதன் இடமற்ற இடத்தில்(Non place) வாழ நேர்ந்தவன்.அனுதினமும் மொழி,தேசம்,இனம் போன்ற பிரேத்யேக அடையாளங்களைத் தொலைத்து வருபவன்.தவிரவும், புலம் பெயர்தலால் கலாச்சார அதிர்ச்சிகளுக்கு ஆளானவன்.நிச்சயமற்ற இருத்தலின் விளைவாக சமனிலை குலைந்து போனவன்.இயல்பிலேயே இரட்டைத் தன்மை கொண்டவன்.இதனால் சமயங்களில் இவன் தான்(Ego) வேறு; தன் ஆன்மா(Alter Ego) வேறு என்று இரண்டாக பிரிந்து போக(Homo Dupleix) நேர்கிறது.அதன் விளைவாக தன் ஆன்மாவுடனேயே தீவிரமாக மோதிக் கொள்ளும் மல்யுத்தம் சாத்தியமாகி விடுகிறது.இந்த யுத்தம் சம்பந்தமற்றதை இணைக்கிறது(Fuses) சம்பந்தமுள்ளதைக் குழப்புகிறது(Confuses) கால வித்தியாசங்களைக் கலைத்து எல்லாக் காலங்களுக்குமாய் வியாபிக்கிறது(Diffuses) எனவே, இவனைப் பற்றிப் பின்னப்படும் ஒரு கதை பல கதைகளாகத் தன்னைப் பெருக்கிக் கொள்வது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.இதில் வரும் அலெக்ஸாண்டர் வேறு காலங்களில் வேறு அலெக்ஸாண்டர்களாகத் தன்னைப் பெருக்கிக் கொள்கிறான்.மூர்க்கத்தனமான கடந்த காலத்தின் மேல்,க்ரூரமான நிகழ்காலம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டுமானத்தில் அலைந்து கொண்டிருக்கும் இவன் எதிர்கொள்ள நேரும் எதிர்காலம் பற்றிய விபரீத சாத்தியங்களே இந்த் கதை என்றும் சொல்லலாம்.இந்தக் கதைக்கு அத்தியாயங்கள் கிடையாது.பாகங்கள் இல்லை.வரிசையாக எழுதப்பட்டிருக்கும் இதை ஒரே மூர்ச்சனையில் யாரும் படிக்கலாம்.எல்லா அலெக்ஸாண்டரும் ஒரே அலெக்ஸாண்டர்தான்.வேறு காலங்களில் வேறு பிரதேசங்களில் அலைவுறும்போது அவன் வேறு மாதிரியான உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளாக வேண்டியதாகி விடுகிறது.இதனால் இந்தக் கதை ஏககாலத்தில் தன்னை ஒரு சரித்திரக் கதையாகவும்,சமூகக் கதையாகவும்,துப்பறியும் கதையாகவும் எதிர்காலப் புனைவாகவும் பலவிதமாகத் தன்னைப் பெருக்கிக் கொண்டு விடுகிறது.எனவே,இது ஜெர்ஸி கோஸின்ஸ்கியின் நிறைவேறாத இலட்சியப் பிரதியான-‘உள்ளார்ந்த நாடகமான’ ‘சரித்திரபூர்வமான’’உண்மையும் அற்ற பொய்யும் அற்ற’-ஒரு பிரதியாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு விடுகிறது.ஆரூபங்களாகக் கைகோர்த்துக் கனவுகளுடன் அலையும் என் முன்னோடிகளான போர்ஹேயும்,கோஸின்ஸ்கியும் என் முதுகுக்குப் பின்னால் நின்று மௌனமாக நான் எழுதுவதைக் கவனிக்கிறார்கள்.மீசை மழிக்கப்பட்ட அந்த முகங்களில் புன்னனை அரும்புகிறது.ஆனால் ,என் கையோ தொடர்ந்து எழுதிச் செல்கதிறது….’என்பது ‘அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்’ நாவலின் முகவுரையில் சுரேஷ் கூறியவை…..


ஒரு விடயத்தைக் கூற மறந்துவிட்டேன்.நாவலின் இன்னொரு முக்கிய பாத்திரமான அலெக்ஸ் கிளிநொச்சியில் பிறந்து சென்னைக்கு குடிப்பெயர்ந்து பின்னர் கனடாவில் வாழ்ந்து எகிப்திய மண்ணில் அலைகின்றவன். இதற்குப் பின்னர் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை நீங்கள் நாவலைப் புரட்டும் வரை….

Sunday, June 13, 2010

தவிர்க்க முடியாத உபதேசங்கள்


‘சுஜாதா’ தமிழ் எழுத்துலகின் பிரபல எழுத்தாளர்.மிகப் பெரிய வாசகர் வட்டத்தைத் தன்னகத்தே கொண்ட அவரின் எழுத்துக்கள் தனித்துவமானவை.நாவல்கள்,சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் என பல தளங்களில் இயங்குகின்ற எழுத்தாளரான இவரின் பன்முகத் திறமையை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.தமிழ்த் திரையுலகிலும் இவரது பங்கு அளப்பரியது.சுஜாதாவின் கட்டுரைகளில் நிறைய ‘விஷயம்’ இருக்கும் அவை நமக்குள் ஆழமான சிந்தனைகளைத் தூண்டிவிடும்.அவை அறிவியல் முன்னேற்றங்கள்,இலக்கியம்,புத்தகங்கள் என எல்லா விடயங்களையும் தொட்டுச்செல்லும்.சுஜாதாவின் கட்டுரைகள் ‘கற்றதும் பெற்றதும்’இ’ஓரிரு எண்ணங்கள்’…’நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள்’,’இன்னும் சில சிந்தனைகள்’ ஆகிய தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன.சுஜாதா நிறைய புத்தங்களை வாசித்து தனது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார். இங்கு அவரின் கட்டுரை ஒன்றைத் தருகின்றேன்… இது அவரால் மொழிபெயர்க்கபட்ட கட்டுரைஇமூலம் வேறொருவருடையது…
மற்றவரின் அறிவுரைகளைக் காது கொடுத்துக் கேட்கும் மனநிலை அருகிவருகின்ற இக்காலத்தில் தந்தை ஒருவர் தன் தனயனிற்கு எழுதும் கடிதம் இது,வாசித்துத்தான் பாருங்களேன் …தவிர்க்க முடியாத உபதேசங்கள்
-----------------------------------------------------

அவர்கள் எல்லாம் உன்னை எல்லா மலையும் ஏறச் சொல்வார்கள்,நான் சொல்வது மலை ஏறு , ஆனால் நடைமுறைகளை விட்டுவிடாதே என்பதே.ஐம்பது வருஷமாக சேர்த்து வைத்த ஞானம்,ஒரு பக்கத்தில் சொல்லிவிடுகிறேன்.


உன் துணிகளை நீ துவைத்துக்கொள் சுத்தத்திற்காக மற்றவரை நம்பாதே.இந்த நாட்டைச் செலுத்தும் தலைமுறை வீதிகளில் குப்பை கொட்டி மற்றவர் அவைகளை நீக்கப் பழக்கப்பட்டவர்கள்.உன் குப்பையை நீ சமாளிக்கும்போது உணரும் சுத்தம் ஆச்சரியமளிக்கும்.பிட்ஸா கறைக்கு சோப்புத் தூள் உபயோகிக்கவும்.
அமைப்புக்களை ஸ்தாபனங்களை நம்பு.அரசாங்கம் பல்கலைக்கழகம் குடும்பம் எல்லாமே அமைப்புக்கள்தாம்.அவைகளில் நம்பிக்கையே இல்லை.இப்போது நீயே ஒரு நல்ல அமைப்புத்தான்.அதற்கு நானும் உன் அம்மாவும் உத்தரவாதம்.உறுதியான பாகங்கள் நல்ல உடலில் உள்ள அமைப்பு நீ.ஸ்தாபனங்களை நம்பு.ஆனால் அவைகளை வரிந்துகொள்ளாதே.நகரத்தில் வாழ்வதென்றால் சின்னத்தோட்டமாவது இருக்கும் சிறிய வீடுகள் கொண்ட பகுதியில் வசி.கொஞ்சமாவது நீல வானம் தெரியட்டும்.அப்போதுதான் நம் அளவின் அற்பம் புரியும்.கடற்கரைக்குச் செல்.மலைகளை நாடாதே! மலைகள் பெரிதாக அளவாக இருந்தாலும் நாளடைவில் உன்னை நம்பிக்கையிழக்க வைக்கும்.நீ பெற்றோர்கள் அருகில் வசிக்க முடிந்தால் மிக நல்லது.

வாழ்க்கையில் கொஞ்சமாவது பகல் கனவு வேண்டும்.பகல் கனவுகள் உண்மையின் பகுதிதான்.உன் அப்பா ஒருமுறை வகுப்புக்கு வெளியே சன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தபோது ஆசிரியர் என்ன திரும்ப வந்து மற்றவர்களுடன் சேர உத்தேசமா? இல்லையா? என்று கேட்டார்.அப்போதுமே இல்லை என்றுதான் சொல்ல நினைத்தேன்.நாம் நமக்குத் தெரிவதை கற்பனை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஷெல்லி சொன்னார்.தினத்தில் ஏதாவது ஒரு பகுதியை அழகை ஏதாவது ஒரு வடிவத்தில் ரசிக்க முயற்சி செய்.ஒரு கவிதை வரியையோ ,பாடல் வரியையோ சித்திரத்தின் வரியையோ-வரி என்பதுதான் அழகின் ஆதாரமான அங்கம்.

தினத்தில் மற்றொரு பகுதியை சோம்பேறித்தனமாக செலவிடவும் கற்றுக்கொள்.இக்காலத்து இளைஞர்கள் அதிகமாக கடினமாக இலக்கற்று மற்றவர் நலனுக்காக உழைக்கிறார்கள்.உன் நலனுக்காக கொஞ்சம் சும்மா இருக்கும் நேரங்கள் தேவை.விளையாட்டுக்களில் நாட்டம் நல்லது.உன்னால் எப்போதாவது ஜெயிக்கக்கூடிய விளையாட்டாய் தேர்ந்தெடுப்பது நல்லது.உனக்கு சித்திரம் வரையும் திறமை இருப்பதாக ஆசிரியர் சொல்கிறார்.அதை நீ அலட்சியப்படுத்துகின்றாய்.பிற்காலத்தில் சித்திரக்காரனாகவோ வேறு எந்தத் திறமை பெற்றாலும் நீ கற்றுக்கொள்ள வேண்டிய விமர்சனங்களைப் புறக்கணிப்பதே திறமையில்லாதவர்கள்தாம் விமர்சகராகிறார்கள்.

ஏய்ன்ரேண்டின் நீருற்று நாவலில் ஒரு விமர்சகன் கட்டடக் கலைஞன் கதாநாயகனை,”நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்? இஎன்று சொல்லேன்” எனக் கேட்கிறான்“நான் உன்னைப் பற்றி நினைப்பதே இல்லை” என்கிறான்.இதுதான் விமர்சகர்களுக்கு சரியான பதில்.சண்டை போட வேண்டும் என்றால் இடம் காலம் அறிந்து சண்டையிடவும்.வாழ்க்கையி;ல் விரோதிகள் வேண்டும்.ஒரே கொள்கையைப் பிடித்துக் கொண்டு அலையாதே.அது வெறுப்பை வளர்க்கும்.புகார் சொல்வதைத் தவிர்.புகார் சொல்வதனால் எதுவும் நடக்கப் போவதில்லை.வாழ்வில் எது செய்தாலும் மற்றவர் திறமையைப் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் உன் திறமையில் நம்பிக்கை வளரும்.

ஒரு சில பின்குறிப்புக்கள்:-
தேர்தல் சமயத்தில் நிச்சயம் வோட்டுப்போடு.நாய் வளர்.ஒரு மனித முகத்தில் அந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பார்க்க முடியாது.’No problem’ ‘இந்தத் தருணத்தில்’ போன்ற சொற்றொடர்களை தவிர்.இறுதியாக அதிகாலை எழுந்து விடு.ஆறு மணி என்பது காலையிலும் உண்டு.5 மணி என்பது அதைவிட உத்தமம்.எழுந்திருந்து சூரியன் மேலே எழத் தடுமாறுவதையும் மெல்ல மெல்ல வானம் முழுவதையும் பார்க்கும்போது அந்த மௌனமான அற்புதத்திற்கு நன்றி சொல்லத் தோன்றும்.Thursday, June 3, 2010

கண்ணீர் பூக்கள்- ஒரு கஸல் ஓவியம்

படித்தவர்களுக்கு மட்டுமேயான கவிதைக்கலை பாரதிக்குப் பின் பாமரர்க்கும் என்றாகிவிட்டது.அந்த வழியில் கவிஞர் அப்துல் ரகுமானின் கஸல் கவிதைகள் யாப்பிலக்கணத்தை மீறி வெகு அழகாக சொல்கின்றன.


உள்ளோட்ட மன உணர்வுகளை முக்கியமாகக் கருதியே தனிமனிதன் ஒருவனின் மனக்குகை ஓவியங்களாக புதுக்கவிதைகள் வெளிவருகின்றன.அந்த வகையில் ரகுமானின் கவியலைகளில் கூறின்,


‘அவர் கவிக்கு
அவர் கண்ணேபட்டு விடும்
வெகு அழகான
கவிவரிகள்…’


இவற்றைப் படித்து நீண்ட நேரம் சென்ற பின்பும் அவை எழுப்பிச்செல்லும் மன அதிர்வுகள் பல இளைஞர்களை நிலை பெறச் செய்யாது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டுது….


வெறும் வார்த்தை விமர்சனங்களால் மட்டும் கவியையோ , கவிதையையோ தரிசித்துவிட முடியாது.வாசகனின் அனுபவமும் கவிதையின் மூலம் பெறப்படும் அனுபவமும் இணைந்து கொள்ளும் சமநிலைப் பரிமாற்றமுமே கவிவரிகள் நிலைபெறச் செய்யும் எனவே அவரின் துளிகளில் ஒரு சில தேன் துளிகளை நீங்களும் பருகிவிடுங்கள்.


ரகுமானின் கவிவரிகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் அவாவினால் அவரின் அனுமதியின்றி அவரின் பதிவுகளை நான் செதுக்குவதினால் அவரின் சொல்வரிகளினாலேயே அவரிடம் மன்னிப்பையும் யாசிக்கிறேன்.


‘பிதாவே என்னைமன்னியும்

இவர்கள் தாங்கள் எழுதுவது

உங்களது கவிவரிகள்

என்று அறிந்தும்

பதிவுசெய்கின்றார்கள்’


வைரமுத்து அவர்கள் இளைஞர்களுக்கு அளித்த வாடாத மாலை ‘காதலித்துப் பார்’ என்றால் ரகுமான் எமக்களித்த கல்வெட்டு ‘கண்ணீர் பூக்கள்’...
அடுத்த பதிவில் மிகுதிக் கவிதைகள்....


Popular Posts