Tuesday, March 29, 2011

வாழ்வை வழியனுப்புதல்

எனது பயணம்
சில பொழுதுகளில்
கனவுகளில்
தொடர்கிறது

விழிப்பு வந்தபோதும்
விழிகளிலேயே தங்கிவிடுகிறது
வியர்த்தமான பொழுதுகள்

இப்போது
பாலைவனத் தனிமையை
உணர்கிறேன்
முன்பும்
இங்கேதான் இருந்தேன்
ஆனால்
நீயிருந்தாய்!

வார்த்தைக்கு வார்த்தை
மௌனத்திற்கு மௌனம்
நம்மிடையே
நிகழ்ந்துகொண்டேயிருந்தது

இப்போது
வெறுமையின் திக்கில்
நகர்கிறது
வாழ்க்கை

தவறி வீழ்ந்தவனிலும்
தானாய் வீழ்ந்தவனின்
அனுபவம்
அலாதியானது

சிறிய
உணர்வுகள் கூட
சிலவேளைகளில்
அத்திவாரத்தையே பெயர்த்துவிடும்
ஆனால்
எனது அத்திவாரமே
அவைகளில்
உருவானதுதான்
அறிவாயா?

4 comments:

ம.தி.சுதா said...

யதார்த்தத்தை உணர்த்தும் அருமையான வரிகள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

Sugirtha said...

//தவறி வீழ்ந்தவனிலும்
தானாய் வீழ்ந்தவனின்
அனுபவம்
அலாதியானது//

நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

Unknown said...

நன்றி சகோதரன் சுதா!!

Unknown said...

நன்றி சுகிர்தா...

Popular Posts