Tuesday, August 3, 2010

மௌன மொழி


கனவுச் சிதறல்களில்
பட்டுத் தெறிக்கும்
உன் நினைவுப் பிம்பங்கள்….


வாழ்க்கை மரத்தின் வேர்கள்
எங்கு புகுந்துகொள்ளும்?
அல்லது
அது எத்திசைதான் கிளைவிடும்?

உலகம் சிலவேளைகளில்
காட்டுக் கூச்சல் போடும்
பலசமயங்களிலோ
மௌனமாய் வேடிக்கை பார்க்கும்

ரணமும் வேதனையும்
பின்னே தொடரும்
நிழல்போல

ஒரு சமயம்
என் ஆன்மா
தள்ளிநின்று என்னை
வேடிக்கை பார்த்தது
அது உன்னைப் பிரிந்துபோனகணம்
நிகழ்ந்தது….

எனக்குசிறகுகள் தந்தது
நீதான்!
ஆனால் திருப்பிக் கேட்கிறாய்
கீழே இறங்கு முன்னமே!

வார்த்தைகள் மட்டுமல்ல
மௌனம் கூடசுடுகின்றது …

நீ கருமையான பகல்
வெளிச்சமான இரவு

அமைதியான நீரோடைபோலிருக்கிறாய்
உனக்குள் இருக்கும் சுழலோ
வெளியில் தெரிவதில்லை

உன்னைத் தூர நின்று
ரசிக்கும் போது
நிலவைப் பார்த்து
பிரமித்துப்போகின்ற குழந்தையாய் நான்….

3 comments:

THARMIKA said...

உலகம் சிலவேளைகளில்
காட்டுக் கூச்சல் போடும்
பலசமயங்களிலோ
மௌனமாய் வேடிக்கை பார்க்கும் varuththathitkuria unmai
after long time, bt nice kavithai

Unknown said...

நன்றி .... நீங்கள் கூறுவது உண்மைதான் !

Anonymous said...

மென்மையான வரிகள்

Popular Posts