Thursday, May 27, 2010

M.G.சுரேஸ் - பிரமிக்க வைக்கும் எழுத்துக்களிற்குச் சொந்தக்காரர்நவீன உலகின் மனிதர்கள் புத்தகங்கள் வாசிப்தற்கு நேரம் இல்லை என்கிறார்கள்.தொலைக்காட்சிக்குள் முகம் புதைத்து இணையத்தில் அரட்டையடித்து தமிழ் சினிமாவை பற்றி நிறைய ஆராய்ச்சி எல்லாம் செய்வதற்கு நேரம் இருக்கிறது.ஆனால் புத்தகம் என்று வந்துவிட்டால் ரொம்பத்தான் பயந்துவிடுகின்றார்கள்.
நல்ல புத்தகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவு வாழ்க்கையின் புதிரான பயணத்தில் வழிகாட்டியாகி நிற்கும்.தமிழ் கதை உலகின் வரிசையில் தரமான நாவல்களின் பட்டியல் அதன் வரலாற்றைப்போன்று மிக நீண்டது.தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள் அவர்களிற்கு சற்றும் குறையாத எமது ,ஈழத்து எழுத்தாளர்களின் பல நாவல்கள் எக்காலத்திலும் பேசப்படுபவையாக உயர்ந்து இடத்தில் இருக்கின்றன.


இவ்வார வலைப்பதிவில் எனக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர் M.G..சுரேஸ் அவர்களின் நாவல்களைப் பற்றிய எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


M.G.சுரேஸ் - பிரமிக்க வைக்கும் எழுத்துக்களிற்குச் சொந்தக்காரர்ஆ.பு.சுரேஸ் ஒரு சிறந்த இலக்கியவாதி.பின்நவீனத்துவ இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.இவரால் எழுதப்பட்ட நாவல்கள்.1. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்(திருப்பூர் தமிழ் சங்க விருது பெற்ற நாவல்)2. அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்3. தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக்கூடுகள்4. கான்க்ரீட் வனம்5. 37 (a polyphonic novel)6. உறங்க என்றொரு நகரம்7. சிலந்தி


இவரது ஒவ்வொரு நாவலும் தனித்தன்மை வாய்ந்தது.’அட்லான்டிஸ் மனிதன்….’ ஒரு உரடிளைவ வகை நாவல்,’அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்..’ ஒரு Autofiction வகை நாவல் அதே போன்று ’37..’ ஒரு polyphonic நாவல்.


M.G.சுரேஸ் தனது வாசகனையும் கதையில் பங்குகொள்ள வைக்கின்றார் அது மட்டுமின்றி தனது கதைகளில் சொல்லப்படும் விஷயங்களுக்காக நிறையபே படித்திருக்கின்றார்.அவரது கடின உழைப்பு அவரது கதைகளில் வெளிப்படுகின்றது.


இவரது மூன்று நாவல்களை அடுத்தடுத்து வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.நிச்சயமாக நான் பெருமைப்படுகின்றேன்.உலகத் தரமிக்க தமிழ் எழுத்துக்கள் அவரது நாவல்களில் வெளிப்படுகிறது.இவரது கதைகளில் வாழ்கின்ற பாத்திரங்களின் வாழ்க்கை அழகாக சொல்லப்படுகிறது.மிகைப்படுத்தப்படாத யதார்த்தமான எழுத்துக்களை வியப்பூட்டும் பாணியில் எழுதும் இவரின் மொழி நடை அலாதியானது அமைதியான ஓடைபோன்றது.


இவரது எழுத்துக்களைப் போன்று நாவல்களின் தலைப்புக்களும் அழகானவை.முகப்பு அட்டையை ஒரு மிகச்சிறந்த ஓவியம் அலங்கரிக்கும் அவை நாம் எங்கும் பார்த்திராத ஒரு புராதன ஓவியமாகவோ அல்லது பரிசு பெற்ற படமாகவோ இருக்கும்.


ஓரு நாவல் என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இருந்து விடாது, வாசகனின் மனதில் என்றும் அழியாத தடத்தைப் பதித்துச்செல்லும் எழுத்துக்களே காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.சுரேஸின் எழுத்துக்கள் நம் வாழ்க்கையில் நிகழும் அபத்தங்களும் ஆச்சரியங்களையும் அழகாகக் காட்டுகின்றது.

37 ( a polyphonic novel)
37 என்பதுதான் இந்நாவலின் தலைப்பு.பலகுரல் நாவல்(polyphonic) என்ற இவ்வகை நாவல் தமிழிற்கு புதுமையானது எனலாம்.எளிமையான கதை வடிவம் அதே சமயத்தில் சற்றும் சுவாரஷ்யம் குறையாத நடை,கதாபாத்திரங்களின் பார்வையிலே கதையைச் சொல்லும் விதத்தில் இந் நாவல் மிகச்சிறந்த படைப்பாகும்.முக்கியமாக கதையில் வரும் அஃறிணைப் பாத்திரங்கள் கூட கதை சொல்கின்றது.


எமது பால்வழி மண்டலத்துக்கு அடுத்து 1 500 000 ஒளிவருடங்களுக்கு அப்பாலுள்ள பால்வழி மண்டலத்தில் இருக்கும் எமது பூமியை ஒத்த கிரகத்திலிருந்து வந்த ஒரு மனிதன் இங்கே சந்திக்கும் ஒருவனுடன் நிகழ்த்தும் உரையாடலினூடே கதை நகர்கின்றது பின்பு அது பலகுரல் எனும் வேறொரு தளத்தில் பயணிக்கின்றது.


இந்நூலை வெளியிட்ட புதுப்புனல் சொல்லும் முகவுரையில்...‘நவீன அறிவியல் தொடர்பான செய்திகளையும்,பண்டைய வாய் மொழி கதை மரபு பாணியையும் ஒன்றாக இணைத்து இந்த நாவலைப் படைத்திருக்கிறார் ஆ.பு.சுரேஸ்.இந்த நாவலில் இரண்டு கதாபாத்திரங்கள் ஆரம்பித்து வைக்கும் கதையை பல உயர்திணை அஃறிணை கதாபாத்திரங்கள் அதனதன் பார்வையில்(polyphonic novel) தொடர்ந்து சொல்லிக்கொண்டு போகின்றன.எனவே இது ஒரு பலகுரல் (polyphoni) நாவலாக மாறிவிடுகிறது.பிரெஞ்சு பின்நவீனத்துவ இலக்கிய விமரிசகர் ரொலான் பார்த் பூஜ்ய பாகைக் கோள எழுத்துமுறை(zero degree writing)என்ற ஒரு எழுதும் வகையைப் பற்றி தனது கட்டுரை ஒன்றில் பேசுகிறார்.மிகையுணர்ச்சி இல்லாத வாசகனை தற்காலிக மனச்சிதைவு நோய்க்கு(அயமநளாகைவ நேரசழளளை) ஆளாக்காத,எளிமையான கவித்துவமான படிமங்கள் அற்ற விலகிய பார்வையில் கதை சொல்லப்படும் தட்டையான நடையே பூஜ்ய பாகைக் கோண எழுத்து முறை ஆகும்.இந்த நாவல் அத்தகைய பாணியில் எழுதப்பட்டிருக்கிறது எனலாம்.எனவே உள்ளடக்கம்,உருவம் இரண்டிலுமே இந்த நாவல் ஒரு புதுவகையான கதையாடல் என்று கருதலாம்’என்கிறது புதுப்புனல்.


உலகில் நாம் அறியா விடயங்கள் எம் முன்னே விரிந்து கிடக்கின்றது.சுரேஸ் போன்ற எழுத்தாளர்கள் தாம் பயணம் செய்த பாதைகளில் எம்மையும் கையைப் பிடித்து அழைத்துச் செல்லும்போது ஏற்படும் பிரமிப்பை வார்த்தைளில் அடக்க முடியாது….

Popular Posts