நம்பிக்கை
அவனுடையது
நாட்களெல்லாம்
வேகமாய்க் கடந்துபோக

அத்தனை அழகானதாய்
இருக்கவில்லை
அந்தப் புன்னகைக்குள்தான்
எத்தனை வேதனைகள்
ஒளிந்திருக்கும்
காலம் ஓர்நாள்
தோற்று நின்ற பொழுதில்
அவனே
விடியல்களுக்கான
ரேகைகளைப் பரப்பி நிற்கும்
சூரியனானான்
மண்டேலா
அது சாத்தியம்
என்ற வார்த்தைக்குச்
சரியான பிரதியீடு