




படித்தவர்களுக்கு மட்டுமேயான கவிதைக்கலை பாரதிக்குப் பின் பாமரர்க்கும் என்றாகிவிட்டது.அந்த வழியில் கவிஞர் அப்துல் ரகுமானின் கஸல் கவிதைகள் யாப்பிலக்கணத்தை மீறி வெகு அழகாக சொல்கின்றன.
உள்ளோட்ட மன உணர்வுகளை முக்கியமாகக் கருதியே தனிமனிதன் ஒருவனின் மனக்குகை ஓவியங்களாக புதுக்கவிதைகள் வெளிவருகின்றன.அந்த வகையில் ரகுமானின் கவியலைகளில் கூறின்,
‘அவர் கவிக்கு
அவர் கண்ணேபட்டு விடும்
வெகு அழகான
கவிவரிகள்…’
அவர் கண்ணேபட்டு விடும்
வெகு அழகான
கவிவரிகள்…’
இவற்றைப் படித்து நீண்ட நேரம் சென்ற பின்பும் அவை எழுப்பிச்செல்லும் மன அதிர்வுகள் பல இளைஞர்களை நிலை பெறச் செய்யாது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டுது….
வெறும் வார்த்தை விமர்சனங்களால் மட்டும் கவியையோ , கவிதையையோ தரிசித்துவிட முடியாது.வாசகனின் அனுபவமும் கவிதையின் மூலம் பெறப்படும் அனுபவமும் இணைந்து கொள்ளும் சமநிலைப் பரிமாற்றமுமே கவிவரிகள் நிலைபெறச் செய்யும் எனவே அவரின் துளிகளில் ஒரு சில தேன் துளிகளை நீங்களும் பருகிவிடுங்கள்.
ரகுமானின் கவிவரிகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் அவாவினால் அவரின் அனுமதியின்றி அவரின் பதிவுகளை நான் செதுக்குவதினால் அவரின் சொல்வரிகளினாலேயே அவரிடம் மன்னிப்பையும் யாசிக்கிறேன்.
‘பிதாவே என்னைமன்னியும்
இவர்கள் தாங்கள் எழுதுவது
உங்களது கவிவரிகள்
என்று அறிந்தும்
பதிவுசெய்கின்றார்கள்’
வைரமுத்து அவர்கள் இளைஞர்களுக்கு அளித்த வாடாத மாலை ‘காதலித்துப் பார்’ என்றால் ரகுமான் எமக்களித்த கல்வெட்டு ‘கண்ணீர் பூக்கள்’...
அடுத்த பதிவில் மிகுதிக் கவிதைகள்....
10 comments:
nice janu
"வாசகனின் அனுபவமும் கவிதையின் மூலம் பெறப்படும் அனுபவமும் இணைந்து கொள்ளும் சமநிலைப் பரிமாற்றமுமே கவிவரிகள் நிலைபெறச் செய்யும்" saththiyamana unmai...
"வாசகனின் அனுபவமும் கவிதையின் மூலம் பெறப்படும் அனுபவமும் இணைந்து கொள்ளும் சமநிலைப் பரிமாற்றமுமே கவிவரிகள் நிலைபெறச் செய்யும்" saththiyamana unmai...
"வாசகனின் அனுபவமும் கவிதையின் மூலம் பெறப்படும் அனுபவமும் இணைந்து கொள்ளும் சமநிலைப் பரிமாற்றமுமே கவிவரிகள் நிலைபெறச் செய்யும்" saththiyamana unmai...
nice janu keep it up
அழகான தொகுப்பு.
படங்களை composeல் insert பண்ணும் போது பெரிதாகப் போட்டுஇருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
Thank you for all.... I'v learnt to correct my faults.. anyway thanks malgudi....
அருமை! அப்துல் ரகுமான் எழுத்துகளுக்கு ரசிகன் என்ற முறையில் உங்கள் எழுத்துக்களிலும் அதன் சாயல் + அதே ஈர்ப்பு இருக்கின்றது! அப்புறம் கவிக்கோவின் ஆலாபனை வாசித்திருக்கிறீர்களா!? வாழ்வியலை அச்செழுத்துகளில் பொறித்திருக்கிறார்! keep reading + blogging
நன்றி லிங்கநேசன் ....அப்துல் ரகுமானின் பாதிப்பை வாங்கிக் கவிதைகள் எழுதுவதில் எனக்கு விருப்பம் உண்டு. ஆலாபனை இன்னும் வாசிக்வில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் புளொக் எழுதுவதில் இருந்த ஆர்வம் இப்பொழுது இல்லாமல் போய்விட்டது. ஆனால் எழுதுவேன்...!
Post a Comment