புலராத பொழுதில்
தொடங்கிய
சிறுமழை
ஜன்னல் வழி
வந்து என்னைத்
துயில்கலைத்துப்
போனதின்று
பெயர் தெரியாக் குருவியொன்று
இடம்தெரியாது
மழைக்கொதுங்கியது,
வீட்டுக்குள் வந்த
விருந்தாளிக்கு என்ன கொடுக்க?
வருகையின் சத்தம்
கூரையில் தெறிக்கும் சத்தம்
மண்ணை முத்தமிடும் சத்தம்
இலைகளில் படியும் சத்தம்
சோவென்ற சத்தம்
மழையின் சத்தம்,
இளையராஜாவின் பாடலொன்று
மனதிற்குள் வந்துபோகும்
மின்சாரக் கம்பிகளில்
முத்துக்கள் கோர்க்கும்
மழை
கருவானம்
மெல்லிருள்
குளிர்காற்று
மண்வாசம்
சிறுவெள்ளம்
நீரக்குமிழ்,
கவிதைக்கு என்ன தலைப்பிட?
தென்னை ஓலைகளில்
சொட்டும் துளி
ஓட்டுவீட்டிற்குள் ஒழுகும் துளி
மண்ணில் இட்டதுளி
கொடிக்கயிற்றில் தெறிக்கும் துளி
கைகளில் நான்-
வாங்கிய துளி
எதற்கு விலை அதிகம்?
சுடச்சுடத் தேநீர்
குவளையில் தீர
இன்னொன்று கேட்கலாம்
அம்மாவிடம்
மழை இன்னும் விடவில்லை....
Sunday, August 11, 2013
Sunday, August 4, 2013
இருந்தாலும் நாம் நண்பர்கள்தான்

முதற்சந்திப்பு
நமக்குள் எப்போதும்
சரியாக இருந்ததில்லை
நட்பு
ஞாபகம் இருக்கிறதா?
எப்போதும்
சண்டையை
நீயேதான் தொடங்குவாய்
சட்டெனக்
குரலுயர்த்துவாய்
பின் கண்ணீர் சிந்த
கூர்வாள்கள்
எனை நோக்கித்
திரும்பும்,
நீ மறைவாய்ப் புன்னகைப்பாய்
நம் எதிரெதிர்
குணங்களில்
பகை வளர்த்து
விருட்சமாகிப் போக,
அடியில்
நிழல் தேடுகிறார்கள்
சில மனிதர்கள்
அகந்தை
அடங்காத பெருந்தீ
இன்னும்
அதில் நாம்
எரியத்தான் வேண்டுமா?
பதிவின் வகை:
கவிதை
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் திரைப்படப்பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோலத்தில் உருவாகி வெளியாகி இருக்கின்றன. ஆஸ்கார் நாயகன், அவர்...
-
'பறவையின் பாதை' – அப்துல் ரகுமானின் சுஃபிக் கவிதைத் தொகுப்பு. இன்றுதான் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். முன்னுரையிலே சொல்லிவிட...
-
படித்தவர்களுக்கு மட்டுமேயான கவிதைக்கலை பாரதிக்குப் பின் பாமரர்க்கும் என்றாகிவிட்டது.அந்த வழியில் கவிஞர் அப்துல் ரகுமானின் கஸல் கவிதைகள் யாப்...
-
நம் ஒவ்வொருவரது வாழ்க்கையின் ஞாபகப் பதிவுகளில் இன்னும் பசுமையாக இருக்கின்றது "18 வயது’… பருவத்தின் விளிம்பில் மன அலைகள் கட்டுக்கடங்காமல...
-
"Love is the law of God. You live that you may learn to love. You love that you may learn to live. No other lesson is required of Man...
-
ஹைக்கூ என்கிற ஜப்பானிய கவி வடிவம் உலகப் பிரசித்தமானது.தமிழில் ஏராளம் ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன… அழகிய மூன்று வரிக்கவிதைதான் ஹைக்கூ! அது வா...
-
ஒரு ஸென் குருவின் ஹைக்கூ: உதிர்ந்த இலை கிளைக்குத் திரும்புகிறதோ? வண்ணத்துப் பூச்சி. ஸென் கவிஞர் கூறுகிறார். “வண்ணத்துப் பூச்சி எனப்படும் இ...
-
எழுத்தாளர் சுஜாதாவின்,நாவல்கள்,சிறுகதைகள்,கட்டுரைகள்,கேள்வி பதில்கள் வரிசையில் அவரின் சிறுசிறு கதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.இவ் வகைக் க...
-
‘கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம்.எனக்கோ இது வேறெதையும் விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.தோல்விகளும் இயல...
-
மழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஒரு நாளில்லை , இரண்டு நாளில்லை ஒரு வாரமாய கொட்டித்தீர்க்கிறது. எங்கும் வெள்ளக்காடு...! எனது சின்னப் பொ...