வளைவுகள்
கொஞ்சம் அதிகம்தான்!
முட்கள் குத்தின
வலிக்கவில்லை,
இல்லாத செருப்புகளிற்கு
நன்றிகள்
எத்தனை பொறிகள்தான்
வைப்பாய்?
எல்லாம் பழகியதுதானே!
முன்புபோல் ஓடவில்லை
எதற்கு அவசரம்?

இருப்பதைப் பிடுங்கிவிட்டு
இல்லாததைக் கொடுத்துவிடுகிறாய்,
இழப்புகளில் பழகிவிட்டேன்
மற்றவர் போல்
ஒருக்கால் வாழ்த்திவிட்டு
பிறகு தூற்றமாட்டேன்,
பிறகு?
நீயே இல்லை என்கிறேன்!
அப்படியென்றால்?
ஓர்நாள் 'நான்' கூட
இல்லை என்றுகூற
நானிருக்கமாட்டேன்...!