Friday, January 14, 2011

நிலவு வெளியில்....


கருஞ்சமுத்திர
வெளியூடே
பயணஞ்செய் !

நட்சத்திர
படகுகள்
வழிவிடும் .....

முகில்
அலை வந்து
மோதும்....

பூமி
முகட்டை
வெளிச்சஞ்செய் !

ஒரு கோடி
தொடக்கி
மறுகோடி வரை
மிதந்து போ....

மறுபடியும்
நாளை வா!

Friday, January 7, 2011

மரிக்கும் நீரூற்று

கடந்து வந்த
பாதையின்
நீட்சி
திரும்ப முடியா
பயணத்தின்
எல்லை
பாதைகள்
பிரிந்துகொள்ள
தனிமையுடன்
கைகோர்த்துக்கொள்கிறேன்
நினைவுகளின் கனதி
அழுந்துகிறது
இனி
நடப்பது
கடினம்....

Popular Posts