ஒரு தேர்ந்த எழுத்தாளனின் உலகப் பிரசித்தி பெற்ற நாவல் ஒன்றை வாசித்து முடித்துவிட்டேன்.’80 நாளில் உலகம்’ என்ற அந்த அழகிய நாவல் Julus Vern(France) என்ற எழுத்தாளரால் முதலில் பிரெஞ்சு மொழியில் ((Le tour du monde en quatre-vingts jours(French title)) எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் Around the World in 80 days’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது.
இந்நாவலில் Julus Vern இன் எழுத்துக்கள் கற்பனைகள் கலக்காத யதார்த்தமான சம்பவங்களின் தொகுப்பாக அமைந்துள்ளன.நாவலின் கதாநாயகன் Phileas Fogg உயர்ந்த பண்புகளைக் கொண்ட எத்துணை துன்பம் வரினும் தன் நேர்மையிலும் ஒழுங்கிலும் விட்டுக்கொடுப்பற்ற
தன்மையுடன் விளங்கும் செயல் வீரனாகப் படைக்கப்பட்டுள்ளான்.
இந்தக் காலத்தில் ஒருவர் ‘இதோ இந்த உலகத்தைச் சுற்றி வருகின்றேன் பார்’ என்று புறப்பட்டால் அது ஒரு பெரியவிடயமாக இருக்கப் போவதில்லை.ஆனால் 18ம் நூற்றாண்டில் அது பெரிய விடயம்தான்.அதுவும் 80 நாட்களில் பயணம் செய்வது என்பது அந்த காலகட்டத்தில் மிகவும் ஆச்சரியமான விடயம்.
ஓரு பந்தயத்திற்காக ’80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வருகின்றேன் என்று தனது குறிக்கோளில் உறுதியுடன் பயணிக்கும் செயல் வீரனின் கதை.Phileas Fogg பயணிக்கும் இடங்கள் அவற்றின் பூகோளச் சிறப்புக்கள்ääவித்தியாசமான கலாச்சாரங்கள் என்பவற்றை சிறப்பாக வெளிப்படுத்துதோடு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை மிகுந்த கவனத்துடன் கையாண்டு மொத்தத்தில் ஒரு சுவாரஷ்யமான நாவலாக பரிணமிக்க விட்டிருக்கிறார் நாவலாசிரியர். இந்தப் பயணம் இங்கிலாந்திலிருந்து தொடங்குகிறது பயணம் முடிவடையும் இடமும் ஆதே இடம்தான் பந்தயத்தில் வெற்றி பெற்றரா இல்லையா என்பதுதான் கதை. இந்நாவலின் முதல் அத்தியாயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.மிகுதியைத் தொடராகப் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கின்றேன்….
அத்தியாயம் - 1 ‘கணிதச் சுத்தம்’ 1872ம் வருடத்திய இங்கிலாந்து இலண்டன் மாநகரில்ää பிரசித்தமான ஸாவில்லா வரிசையில்ääகுறிப்பிட்ட ஓர் இல்லம்.ஏழாம் நம்பர் வீடு அங்கே வசித்து வந்தார் ஸ்ரீமான் பைலீஸ் பார்க. ஆரம்பத்தில் அநேகமாக அவரைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது.தெரிந்த சிலருக்கும் ஸ்ரீமான் பைலீஸ் பாக் ஒரு நல்ல குணவான் என்று மட்டுமே தெரிந்திருக்க முடியும்.
பைலிஸ_க்கு அவருக்கே உரித்தான சில குணங்கள் இருந்தன. முpகக் கொஞ்சமாகவே பேசுவார். இந்த ஒரு தனிக்குணமே அவரைப் பார்ப்பவருக்கு ஒரு பெரும் புதிராக்கியது. எந்தவிதமான தொழிலிலும் அவர் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. வயாபாரப் பரிவர்த்தனை இடங்களிலோ! நீதி ஸ்தலங்களிலோ! வேறு எவ்விதமான தொழிலகங்களிலோ பைலீஸைச் சந்தித்தவரகள் கிடையாது.
நகரில் ஒரு பிரசித்த ‘சீர்திருத்தக் கிளப்’ உண்டு.அதில் பைலீஸ்பாக் ஓர் அங்கத்தினர். அவ்வளதுதான்.அவர் நல்ல பண்க்காரர்! எப்படி அவ்வளவு செல்வம் அவரை வந்து சேர்ந்தது என்பதும் புதிரே.இதைப்பற்றி அவர் யாரிடமும் எதுவும் பேசுவதும் கிடையாது. இயல்பாகவே அவர் பேசுவது என்பது மிக மிகக் குறைவுதான். அவர் பிரயாணம் செய்ததுண்டா என்று கேட்டால் அங்கேதான் நிறைந்த விசேஷம் இருக்கிறது.பைலிஸ_க்கு இருந்த உலக அறிவு – பூகோளத் திறனாய்வு - வேறு யாருக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான். உலகத்தில் எந்த மூலையில் எந்த இடம் உள்ளது என்பதும்,அவ்விடத்தைப் பற்றிய விசேஷங்களும் அவருக்கு அத்துப்படி.நேரே போய்ச் சென்றிருக்கிறாரோ இல்லையோää படித்தறிந்து, எல்லா இடங்களுக்கும் அவர் மானசீகமாகச் சென்றிருக்க வேண்டியது உறுதி.
ஆனாலும், எத்தனையோ வருட காலமாக லண்டன் நகரை விட்டு, பைலீஸ் அந்தண்டை இத்தண்டை நகராமலிருந்தார். வெளியே சென்றாரானால் அவர் கிளப் ஒன்றுக்குத்தான் செல்வார்.அங்கே பத்திரிகைகள் படிப்பதும்ää நாலு பேருடன் சீட்டாடுவதும்தான் அவருடைய பொழுதுபோக்காகும்.ஆட்டத்திலும் அவர் பெரும்பாலும் சாதிப்பது மௌனம்தான். ஆட்டத்தின் வெற்றிää பைலீஸ_க்கு கொணரும் ஊதியத்தை அவர் தர்மத்துக்கே செலவிடுவார்.
வீட்டில் அவர் தனிமையே உருவானவர்.உறவினர் யாரும் கிடையாது. துpனசரி உணவு உட்கொள்வதெல்லாம் கிளப்பில்தான். அதிலும் அவருக்கென்றே சீரான தனி நியதி உண்டு.ஒரே அறை. ஒரே மேஜை. பெரும்பாலும் தனிமையாகவே! மொத்தத்தில் சொல்லப்போனால்ääபைலீஸ் பாக்கின் நடவடிக்கைகள் அனைத்திலும் தவறாத ஒரு கணிதச் சுத்தம் இருக்கும். அத்தனை ஒழுங்கு. கட்டுப்பாடு! வீட்டில் பாதி நேரமும் கிளப்பில் பாதி நேரமுமாக அவர் காலத்தைச் செலவிட்டார்.
வீட்டில் அவருக்கு உதவியாக ஒரு பணியாள் உண்டு.அவனும் ஒழுங்கும் கட்டுப்பாடும் உடையவனாகவே இருக்க வேண்டும்.இவ்விஷயத்தில் பைலீஸ் பாக் ரொம்பவும் கண்டிப்பானவர்.ஏன் அன்றுதான் அவர் தமது பணியாள் ஒருவனை வேலையை விட்டு ‘டிஸ்மிஸ்’ செய்திருந்தார்.காரணம் என்ன தெரியுமா? எஜமானார் ‘ஷேவிங்’ செய்து கொள்ளுவதற்காக வைக்க வேண்டிய சுடுநீரின் தன்மையை நிர்ணயி;த்து வைப்பதில் தவறிவிட்டான் அந்த அப்பாவி! எண்பத்தாறு டிகிரி உஷ்ணத்தில் வைப்பதற்குää எண்பத்து நான்கு டிகிரி உஷ்ணத்தில் சுடுநீரை அவன் அவர் முன் கொண்டுவந்து வைக்கலாமா?
ஆகவே அன்று காலை புதுப்பணியாள் ஒருவன் அவருக்கு சேவை செய்ய வந்தாக வேண்டும்.பைலீஸ்பாக் தமது நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்த வண்ணம் காத்திருந்தார். ஆரோகணித்துச் செல்லும் பட்டாளத்துச் சிப்பாய் மாதிரி இருந்தார் பைலீஸ். கடிகாரத்தின் நகரும் முட்களைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கடிகாரப் படி பகல் பதினொன்றரை மணியானால், வினாடி கூடத் தாமதிக்காமல் பைலீஸ்பாக் கிளப்புக்குப் புறப்பட்டுவிடுவார்.
கதவை யாரோ லேசாகத் தட்டினார்கள்.பழைய பணியாள் ஒரு புதிய பணியாளைக் கொணர்ந்திருந்தான்.
புதியவனுக்கு முப்பது வயதிருக்கும். தலை தாழ்த்தித் தனக்கு எஜமானாராக இருக்கப் போகிறவருக்கு வணக்கம் செய்தான் அவன்.
“பிரெஞச்சுக்காரன்தானே நீ? உன் பெயர்?”- பைலீஸ் கம்பீரமாகக் கேட்டார்ää சுருக்கமாக.
வந்தவன் தன் பெயர் ஜீன் பாஸபர்டௌட் என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தான்: “எனது ஜீவனத்துக்காக நான் எத்தனையோ அலுவல்கள் பார்த்திருக்கிறேன்! ஸார்.ஆயினும் எனது நேர்மையில் அணுவளவும் எனக்குச் சந்தேகம் கிடையாது.தீ அணைப்புப் படையிலிகூடப் பணியாற்றிää எத்தனையோ பெரிய தீ விபத்துக்களைத் தடுத்திருக்கிறேன். இப்போது நான் ஏதாவது ஒரு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறேன். தங்களுக்கு ஒரு பணியாள் தேவை என்று அறிந்து வந்திருக்கிறேன்.தாங்கள் தனிமையும் அமைதியும் விரும்புபவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இனியும் நான் என் பிழைப்புக்காக அலைய வேண்டியதில்லைääதங்களிடம் வேலை கிடைத்தால்!”
பைலீஸ_க்கு ஜீனைப் பிடித்துவிட்டது.
“சரி! என்னைப் பற்றிய விவரங்கள் உனக்குத் தெரியுமல்லவா?” என்று பைலீஸ் கேட்டார்.
“தெரியும் ஸார்!”
“சரி! இப்போது மணி என்ன?”
“பதினொன்று இருபத்தி ஐந்து” என்றான். ஜீன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு பெரிய வெள்ளிக் கடிகாரத்தை வெளியில் எடுத்துப் பார்த்தபடி!
“உன் கடிகாரம் மெதுவாய் ஓடுகிறது” என்றார் பைலீஸ்.
“மன்னியுங்கள்! ஸார்! அப்படி இருக்க முடியாதே!” என்றான் ஜீன் பாஸர்டௌட் பணிவாக.
“நாலு நிமிஷம் மெதுவாய் ஓடுகிறது! சரி! இப்போது இந்த வினாடியிலிருந்து! அதாவது முற்பகல் பதினொரு மணி இருபத்து ஒன்பத்து நிமிஷத்திலிருந்து – அதாவது 1872ஆம் வருடம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி புதன்கிழமை முற்பகல் பதினொரு மணி இருபத்து ஒன்பது நிமிஷத்திலிருந்து – நீ என்னிடம் வேலையில் அமர்ந்திருக்கிறாய்!”- பைலீஸ்பாக்குக்கு எதுவும் கணிதச் சுத்தம்தான்! ஒழுங்குதான்!
சொல்லிவிட்டு அவர் வேறோரு வார்த்தையும் பேசாமல் எழுந்தார்ää இடது கையால் தொப்பியை எடுத்துத் தலையில் அணிந்தார். ‘விடுவிடென்று’ நகர்ந்தார் வெளியே.
வாசற்கதவு சாத்தப்பெற்ற ஒலி ஜீனுக்கு இருமுறை கேட்டது. முதல் முறை அவனது எஜமானார் வெளியில் சென்றார்.இரண்டாவது முறை பழைய பணியாள் வெளியில் சென்றான்.
ஆந்த பெரிய வீட்டில் ஜீன் தனியாக நின்றான். (தொடரும்……)